Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் - ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் - ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை

ரயில்வேயின் சிறப்பான செயல்பாட்டில் ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்துக்கு இணையான உற்பத்தித் திறன் சார்ந்த போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் 11,40,770 ஊழியர்கள் பயனடைவர். தகுதியுள்ள ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக ரூ.17,951 கிடைக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. போனஸ் வழங்குவதற்காக மொத்தம் ரூ.2,009.61 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ரயில்வேயின் சிறப்பான செயல்பாட்டில் ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அரசிதழ் பதிவு பெறாத தகுதியுள்ள ரயில்வே ஊழியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள்.

தண்டவாளப் பராமரிப்பாளர்கள், ரயில் ஓட்டுநர்கள், ரயில் மேலாளர்கள், நிலைய அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயின்ட்ஸ் மேன்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பிற குரூப் சி ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அறிவிக்கப்பட்ட ரூ.17,951 என்பது தகுதியுள்ள ஒரு ஊழியருக்கு வழங்கப்படக்கூடிய அதிகபட்ச தொகையாகும்.

2025–26 நிதியாண்டில் ரயில்வே 1,670 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. மேலும், சுமார் 7.41 பில்லியன் பயணிகளை ஏற்றி சென்றுள்ளது. இந்தச் செயல்திறனைத் தொடர்ந்து ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அமைச்சரவை அனுமதித்துள்ளது.

முந்தைய செய்தி
டாலருக்கு நிகராக 19 காசுகள்: 4 நாட்களில் 171 காசுகள் உயர்ந்தது ரூபாய் மதிப்பு
அடுத்த செய்தி
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு பயிற்சி: இடஒதுக்கீட்டு விதிகளின்படி கலந்தாய்வு

தொடர்புடைய செய்திகள்